போஸ்கோ இலக்கிய இதழ் (Bosco Ilakkya Ithazh)

இதழ் அறிமுகம்:

ஏலகிரிமலையில் அமைத்திருக்கும் தொன்போஸ்கோ கல்லூரியின் கல்விப் பணியில் ஒரு திருப்பமாக மின்னிதழ் துவங்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் படைப்புகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தவும் தரமான சிறந்தபடைப்புளை வெளிக்கொண்டுவரவும் ஆய்வுத்துறையில் இயங்கும் இளம் தலைமுறையினர்க்கு தக்கவாய்ப்புகளை வழங்கவும் இவ்விதழ் வகை செய்கிறது.

இதழின் நோக்கங்கள்:

தமிழாய்வுப் பரப்பில் புதியசிந்தனை,புதியபொருண்மை, புதியசெய்தி என்கிற அடிப்படையில் ஆய்வுகளை வெளிக்கொணர்வதே இவ்இதழின் நோக்கமாகும்.

ஆய்வுக்கட்டுரைகள் பின்வரும் பொருண்மையில் அமைதல் வேண்டும். :

  1. சங்க கால இலக்கியம், சங்க மருவிய இலக்கியம். இக்கால இலக்கியம், காப்பிய இலக்கியம். பக்தி இலக்கியம் . சிற்றிலக்கியம்.
  2. நாட்டுப்புறவியல் , சித்தர் இலக்கியம், இலக்கணம், தொல்லியல், கல்வெட்டியல், சுவடியல், இதழியல்.