தொன் போஸ்கோக கல்லூரி ஏலகிரி மலை (இருபாலர்)

12.01.22 அன்று நடைபெற்ற பொங்கல் விழா அறிக்கை

        வணக்கம். நம் கல்லூரியில் பொங்கல் விழா தமிழ்த்துறையின் சார்பாக, கடந்த 12.01.22  புதன்கிழமை அன்று நண்பகல் 12.30 மணிக்கு இல்லத் தந்தையின் அலுவலகத்தின் முன்பு சிறப்பாக நடைபெற்றது. இவ்வினிய பொங்கல் விழாவிற்கு நம் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் த. இலட்சுமன் அவர்கள் விழாவில் கலந்துகொண்ட அருட்தந்தைகள், இல்லத்தந்தை மற்றும் பேராசிரியர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நல்கினார். இல்லத் தந்தை ஜான் சந்தோசம் ச.ச. அவர்கள் தலைமைத் தாங்கி பொங்கலைப் பற்றிய சில கருத்துகளையும் பொன்னான பொங்கல் என்பதையும் தெரிவித்தார். தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதையும் பகிர்ந்துகொண்டார். நம் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் சி. ததேயுஸ் ச.ச. அவர்கள் பொங்கல் குறித்த சில கருத்துக்களை கூறியதோடு வாழ்த்துகளையும் கூறி வாழ்த்துரை வழங்கினார். பின்பு நம் கல்லூரியில் உள்ள அனைத்துத் துறைப் பேராசிரியர்களின் உதவியோடு பொங்கல் செய்யப்பட்டும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டும் சமத்துவப் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நம் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வெற்றிவேலன் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் த. லதா அவர்கள் சிறப்பாக  ஏற்பாடு செய்த பொங்கலை பரிமாறினார்கள். அனைத்துத் துறைப் பேராசிரியர்களின் ஒத்துழைப்போடும்  ஆதரவோடும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்வினிய நிகழ்விற்கு தமிழ்த்துறைத் தலைவர் பேரா. த. லதா அவர்கள் நன்றியுரை வழங்கி விழாவை சிறப்பித்தார். அனைவரும் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதோடு இவ்வினிய விழா சிறப்பாக நிறைவுபெற்றது. நன்றி.