போஸ்கோ இலக்கிய இதழ் (Bosco Ilakkya Ithazh)

ஆராய்ச்சிக் கட்டுரையின் அமைப்பு:

உள்ளடக்கம்

1. தலைப்பு
2. கட்டுரையாளரின் பெயர், மின்னஞ்சல், தகுதிகள், தொடர்புஎண்
3. தொடர்புமுகவரி
4. ஆய்வுச் சுருக்கம்
5. முன்னுரை
6. ஆய்வுநெறிமுறைகள்
7. முடிவுகள்
8. இணைப்புகள்
9. மேற்கோள்கள்


தலைப்பு:

1. தலைப்புதெளிவாகவும் விளக்கமாகவும் பொருண்மைவிவாதஅடிப்படையிலும் அமைதல் வேண்டும்.
2. தலைப்பு 14 (Font size)எழுத்தளவில்,தடித்த (Bold) எழுத்துருவில் இருத்தல் அவசியம்.
3. தலைப்புவெளிப்படையாகஅமைதல் வேண்டும், சுருக்கக் குறியீடுகள் ஏனைய குறியீடுகள் போன்றவைபயன்படுத்தக்கூடாது.


கட்டுரைளாளரின் பெயர்,தகுதிகள்,மினன்ஞ்சல்,தொடர்புஎண்:

1. தலைப்புதெளிவாகவும் விளக்கமாகவும் பொருண்மை விவாத அடிப்படையிலும் அமைதல் வேண்டும்.
2. தலைப்பு 14 (Font size)எழுத்தளவில், தடித்த (Bold) எழுத்துருவில் இருத்தல் அவசியம்.
3. தலைப்புவெளிப்படையாகஅமைதல் வேண்டும், சுருக்கக் குறியீடுகள் ஏனைய குறியீடுகள் போன்றவை பயன்படுத்தக் கூடாது.


ஆய்வுச்சுருக்கம்

1. ஆய்வுச் சுருக்கம் (150 to 200) சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரேபத்தியாக(Paragraph)இருத்தல் நலம். ஆய்வுச் சுருக்கம் கட்டுரையின் தலைப்பிற்குள் அவரது சொந்தக் கருத்துக்களைத் தாங்கியதாக இருத்தல் வேண்டும். மேற்கோள்கள் இங்கு கட்டாயம் இடம் பெறக்கூடாது.


முன்னுரை

கட்டுரையின் சிக்கல்களை முன்வைத்து தெளிவாக அமைத்தல் வேண்டும். தலைப்பின் பின்னணி. ஆய்வுக் கருதுகோள் ஆகியவற்றைத் தெளிவாக வலியுறுத்தல் வேண்டும். கட்டுரையின் உட்கருத்தைவிவரிப்பதாகவும் தெளிவாகவும் முன்னுரைஅமையவேண்டும்.


ஆய்வுநெறிமுறைகள்

1. கட்டுரையில் பின்பற்றப்படும் ஆய்வு நெறிமுறைகளை கட்டாயம் விவரிக்க வேண்டும்.
2. நெறிமுறைகள் எவ்வாறு கையாளப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களும் இடம் பெறவேண்டும்.


முடிவுகள்

1. தேர்ந்துகொண்டகருதுகோளினைப் பயன்படுத்தி,நிறுவிஆய்வுமுடிவுகளைஎடுத்துரைக்கவேண்டும்.
2. சுருக்கமாகவும்,தெளிவாகவும் முடிவுரைஅமையவேண்டும்.
2. ஆய்வுக் கட்டுரையில் பயன்படுத்திய சான்றெண்களுக்கு ஏற்ற விளக்கங்களையும் பயன்படுத்திய மேற்கோள்களுக்கான விளக்கங்களையும், அதற்குரிய நூலாசிரியர்கள், நூல்களின் பெயர் போன்ற விபரங்களை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும்.
3. பயன்படுத்தப்பட்ட அகராதிகள், இதழ்கள், கலைக் களஞ்சியங்கள் குறித்த விளக்கங்களைப் பதிப்பு, ஆண்டு போன்றவற்றைத் தெளிவுறக் குறிப்பிட வேண்டும்.
4. பயன்படுத்தப்பட்ட இணையதளங்கள், தரவுத்தளங்கள், வலைப்பக்கங்கள் தொடர்பான முகவரிகளை மிகச் சரியாககக் குறிப்பிட வேண்டும்.